கேப்மாரி- விமர்சனம்

0

 840 total views,  1 views today

ஒரு படத்தை துவக்குவதென்பதே மகத்தான கலை. சடாரென எதையாவது காட்டி ஆரம்பித்து விடக்கூடாது. குறி்ப்பிட்ட பாத்திரத்துக்காக கேமரா காத்திருக்கு வேண்டும். அந்தப் பாத்திரம் ஃபிரேமுக்குள் வந்ததும், மள மளவென்றி தொய்வின்றி கதையே சொல்ல ஆரம்பித்துவிடவேண்டும் இயக்குநர் என்கிறார் உலகபுகழ் பெற்ற ஒரு திரைப்பட விமர்சகர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கதில் வந்திருக்கும் கேப்மாரி படத்தில், தமிழக அரசுக்கு நன்றி. காம சூத்திரம் புத்தகத்துக்கு நன்றி, தமிழக காவல் துறைக்கு நன்றி என மூன்று நான்கு நன்றி கார்டுகள் போடப்பட்டதும் முதல் காட்சிய ரயிலின் முதல் வகுப்பு கூப்பேவில் ஆரம்பிக்கிறது. தனது கூப்பேயில் நுழையும் நாயகனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கறது. எதிர்பக்கத்தில் நாயகி தொடை தெரியும் ஆடையில் இரண்டு கால்களையும் அகல விரித்தபடி ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே அமர்ந்திருக்கிறார். நான் சாப்பிட்டுட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்லி, தன் பையிலிருந்து டின் பீர் பாட்டில் ஒன்றை எடுத்து குடிக்க ஆரம்பிக்க, நாயகியும் நாவில் ஜொள் வடியப் பார்க்க, அவருக்கும் ஒன்றையும் தருகிறார். நாயகி. ஆளுக்கு இரண்டு பீர் சாப்பிட்ட சாப்பிட்டபின் நடந்ததையெல்லாம் காட்டத் துணியாத காரணத்துக்காக இயக்குநருக்கு நன்றி சொல்வோம்.

இந்த முதல் காட்சியை மிஞ்சும் வகையிலான காட்சிகளும் வசனங்களும்தான் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. பெற்ற மகனையே வைத்து சிங்கிள் எக்ஸுக்கும் சற்று குறைவான தரத்தில் ரசிகன் என்றொரு படம் கொடுத்த வக்கிர மனம் கொண்ட இயக்குநரால் வேறு எபபடி சிந்திக்கவோ படமெடுக்கவோ இயலும்.
படம் முழுக்க கதாநாயகி தொடையை காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.தொடைகளை காட்டாத ஒரு காட்சில் மட்டும், சல்வார் கம்மீஸில் ஏன் தென்படுகிறார் என்று யோசிக்கும்போதே,
எதிரே மொபைல் போனில் படமெடுக்கும் கணவரைப் பார்த்து இரண்டு கால்களைத் தூக்கி விரித்துக் காட்டி டீஸ் செய்து வசனம் ஒன்றையும் பேசுகிறார். அதுதான் பார்த்தோம் எஸ்.ஏ.இயக்கிய படமென்றால் சும்மா

அருமையான ஒளிப்பதிவும், இனிமை தர முயலும் இசையும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகியிருக்கின்றன.
படத்தின் சென்சார் சான்றிதழில் இடதுகீழ்புறம் படத்தைப் பார்த்து அனுமதி கொடுத்த அதிகாரிகளின் பெயரும் வலது கீழ் பக்கத்தில் உயர் அதிகாரியின் கையொப்பமும் இருக்கும். இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வக்கீல் நண்பர் யாரையாவது அணுகி நோட்டீஸ் அனுப்பலாமா என்று யோசித்தபோது,
தினப்பத்திரிகைகளில் இதையும் செய்தியாக்கி ஒரு வாரப்படத்தை இரண்டு வாரத்துக்கோ மூன்று வாரத்துக்கோ நீட்டிவிடப் விடப்பார்ப்பார்கள் என்ற அச்சத்தால் அந்த முடிவுக்கு முட்டுக்கட்டை விழுந்து விட்டது.

Share.

Comments are closed.