தினமும் ஆறு முறை ஒளிபரப்பாக இருக்கும் அற்புத நிகழ்ச்சி!

0

 402 total views,  2 views today

சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து ‘தினம்
ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த
நிகழ்ச்சியில் பிரபல இலக்கியப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தினமும் ஒரு
திருக்குறளும், அதற்குரிய பொருளையும் அவருக்கே உரிய எளிய நடையில் இனிமை
ததும்பும் வகையில் வழங்கவுள்ளார்.
 இந்நிகழ்ச்சியில் குட்டிக் கதையின் சாயல் இருக்கும். நகைச்சுவையின் மென்சுவை
மிதக்கும். குழந்தைகளுக்கான மொழியில் அன்புரை இருக்கும்.
 ஆறு நிமிட அளவில் அமைந்துள்ள இந்நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான முயற்சியாகும்.
ஆம், கு.ஞானசம்பந்தன் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களான பொம்மி மற்றும் அதன்
நண்பர்களுடன் உரையாடுவது போல இந்நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.
 சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்
இந்த ‘தினம் ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியானது வரும்
29.4.2019 திங்கட்கிழமை முதல் சுட்டி டி.வியில் அரங்கேற உள்ளது.
 இதுபோன்ற கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து ஒரு தமிழறிஞர் திருக்குறளை,
குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கும் இது போன்ற நிகழ்ச்சி இதுவரையில்
அரங்கேறியதே இல்லை. இதுதான் முதல் நிகழ்ச்சியாகும்.
 
இந்நிகழ்ச்சி பற்றி பேராசிரியர் கு ஞானசம்பந்தன் பேசும்போது,
 
 “இது ஒரு புதுமையான அனுபவம் . இது திருக்குறளை குழந்தைகள்  மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி. இன்றைய குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் அப்பா அம்மாவை விட கார்ட்டூன் கதாபாத்திரங்களைத்தான் அதிகம் பிடிக்கிறது அதன்வழியாக அவர்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இது இதில் குறள் , அதன் பொருள், சின்னதாக ஒரு கதை  இவ்வளவும் 5 நிமிடங்களில் இருக்கும்
 
 திருக்குறளை யாருக்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல முயற்சி இரண்டடி உள்ள  திருக்குறளை இரண்டடி உயரம் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் சரியான முயற்சி. 
 
 குழந்தைகளுக்குப் பிடித்த அனிமேஷன் உலகத்தில் பிரவேசித்து திருக்குறளைக் கொண்டு செல்கிறோம் .இதற்கு எளிமையாக ஒரு கதையை அமைப்பது, திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் சிரமமான வேலைதான் .ஏனென்றால் குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் கடினமானது . செயலில் இறங்கிப் பார்த்தால்தான்  எவ்வளவு கடினமானது என்பது புரியும். ’இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்று சொல்லும்போது குழந்தை கேட்கும் ’இன்னான்னா என்னா ?’ என்று.அப்போது அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் .ஒரு முறை செல்வகணபதி அவர்களின் நூலுக்கு முன்னுரை எழுதும் போது குழந்தைகளுக்கு எழுதுவது என்பது  ஒரு மாயக் கண்ணாடி போன்றது குழந்தைகளுடன் பேசும்போது  பெரியவர்கள் நாம்  குழந்தைகள் ஆகிவிடுவோம் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள் இந்த மாயம் நிகழ்வதை உணர முடியும். அப்படி ஓர் அனுபவத்தை இந்த நிகழ்ச்சி எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது .
இப்படிக்  குழந்தைகளுக்கு அவர்கள் மொழியில் அவர்கள் வழியில் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்ச்சி   உண்மையிலேயே புதுமையான சுவையான ரசிக்கத்தக்க நிகழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
 
இந்த நிகழ்ச்சியானது வரும் 29.4.2019 திங்கட்கிழமை முதல் சுட்டி டி.வியில் காலை 8 முதல் 12 மணி வரை 3 முறையும்,  மாலை 4 மணி முதல் 8 மணி வரை 3 முறையும் என தினமும் 6 முறை ஒளிபரப்பாக உள்ளது.
 
 
Share.

Comments are closed.