விஜய் ஆண்டனி நடிக்கும் “காக்கி” படத்தின் உரிமைகளை கைப்பற்றிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்

0

156 total views, 2 views today

இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாயந்த இயக்குனர்
ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் “காக்கி” திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.

விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்’கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் “காக்கி”, ஒரு பன்முகத் திறமைகள் கொண்ட பல நட்சத்திரக் கலவை.

ஜீன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் நிறைவடைந்திருக்கிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன் – ஷியாம் – ன் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.

இப்படம் அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப் பொழுதுபோக்குப் படமாகும்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு இதுவரை தயாராகியிருக்கும் இப்படத்தின் எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்ட பின்னர், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் கருத்தில் கொண்டு, இப்பட உரிமைகளை வாங்கிட தீர்மானித்தித்தது.மேலும், தயாரிப்பாளர் “ஓபன் தியேட்டர்” உடன் இணைந்து, மார்க்கட்டிங், விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இணைந்துப் பணியாற்றவும் முடிவு செய்திருக்கிறது.

ஜனவரி 2020ல் இப்படத்தை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், “பர்ஸ்ட் லுக்” போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர் | டிரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருக்கிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
விஜய் ஆண்டனி
சத்யராஜ்
ஸ்ரீகாந்த்
இந்துஜா
ஈஸ்வரி ராவ்
ஜான் விஜய்
ரவி மரியா
சன் டீவி புகழ்’கதிர்
மற்றும் பலர்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்ஸா
படத்தொகுப்பு: ரூபன்
இசை: அவ்கத்
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து
சண்டை பயிற்சி: கனல் கண்ணன் – ஷியாம்
தயாரிப்பாளர் – இயக்குனர்: ஏ. செந்தில்குமார்
வெளியீடு: இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் சார்பாக கமல் போரா,
லலிதா தனஞ்செயன்,
பி. பிரதீப் மற்றும் ஏ. பங்கஜ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Share.

Comments are closed.