அஜித், ஜெய் வரிசையில் விமல்?

0

 373 total views,  1 views today

ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது எப்போதும் கொண்டாட்டத்துக்குரிய ஒன்றாகத்தான் அநேகமாக இருக்கும். ஆனால் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா அவ்வாறு அமையவில்லை. காரணம் கஜா புயலின் கோரத்தாண்டவம்…

“ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “ படத்தின் நாயகன் விமல் பேசத்துவங்கும்போதே இந்த விழாவுக்கு நான் வரவில்லை என்றுதான் சொன்னேன் என்று ஆரம்பித்ததுமே அஜித், ஜெய் வரிசையில் அடுத்த ஆளா என்றுதான் தோன்றியது.
தொடர்ந்து பேசிய விமல் அதற்கான காரணத்தைச் சொன்னபோது அரங்கமே சற்று இறுக்கமானது.
விழாவுக்கு நான் வரவில்லை என்று சொன்னதற்கு காரணம். கஜா புயலால் சின்னா பின்னமான டெல்டா பகுதியில் நான் இருந்ததுதான். என் சொந்த ஊரையும் சுற்றுப் பகுதியிலுள்ள ஊர்களையும் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டது. படப்பிடிப்பில் இருவந்தபோது அம்மா அப்பாவுடன் போனில்கூட பேசமுடியவில்லை. அந்த காலத்தில் வெளியூரிலிருந்து ட்ரங்கால் வந்திருக்கிறது என்று தபால் நிலையத்திலிருந்து வந்து அழைப்பார்களே அப்படி யாருடைய மொபைலில் சார்ஜ் இருக்கிறது என்று பார்த்து அவர்களை அழைத்து நாம் பேச வேண்டிய நபர்களிடம் பேச வேண்டியிருந்தது. எனவேதான் என் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டேன்.
அங்கு போய்ப் பார்த்தால் சாப்பாடு தண்ணீர் மின்சாரம் எதுவும் இல்லை. சொந்த ஊரில் நான் இருந்தபோது நிவாரணப் பணியில் ஈடுப்ட்டிருந்த ஆட்கள் என்னைக் கண்டு சற்று உற்சாகமாக வேலைசெய்தார்கள். இரண்டு மூன்று நாட்களாக சரியான சாப்பாடும் தூக்கமும் இல்லாததையும் பொருட்படுத்தாமல் நான் இருப்பதால் உற்சாகமாக வேலை செய்தார்கள். என்னுடைய நண்பர்களும் நீ போய்விட்டால்நிவாரணப் பணிகள் பாதிக்கும் என்று சொல்லவே, நானும் அங்கேயே இருந்து அவர்களுக்கு உதவிகள் செய்து உற்சாகமூட்டினேன் என்றார் விமல்.
புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை செய்துவிட்டு வந்த மன்சூரலிகான் அடுத்து பேசினார்.
கொண்டு போன நிவாரணப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டதால் சென்னை திரும்பிவிட்டேன்.காவிரி டெல்டா பகுிதி மக்களின் கள்ளம் கபடமற்ற அன்பு என்னை நேகிழ வைத்துவிட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகரும் இயக்குநருமான சிங்கம் புலியும் கஜா புயல் பாதிப்பு குறித்து பேசவே இசைவெளியீட்டு விழாவுக்கான கொண்டாட்டமான சூழல் மறைந்து இறுக்கமான சூழல் அரங்கத்திலிருந்த பார்வையாளர்களையும் தொற்றிககொண்டது.

 

 

Share.

Comments are closed.