அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி உதவி

0

Loading

அரிமா சங்கம் எனப்படும் “லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்”, மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை கடந்து 101- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . இதையொட்டி  அரிமா மாவட்டம் 324 ஏ1
சார்பில் சென்னை, கிண்டி “லீ ராயல் மெரிடியன்” நட்சத்திர ஹோட்டலில்., அரிமா மாவட்ட ஆளுனர் லயன் டாக்டர் பாபாயி அம்மா தலைமையில் சிறப்பாக பெரிய விழா ஒன்று நடந்தேறியுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக  அகில உலக அரிமா சங்கத் தலைவர் லயன் . நரேஷ் அகர்வால் மற்றும் , முன்னாள் மத்திய சுகாதாத்துறை அமைச்சர் டாக்டர் .அன்புமணி ராமதாஸ் , அவரது துணைவியார் சவுமியா அன்புமணி , சர்வதேச அரிமா இயக்குனர்கள், ஆளுனர்கள் , துணை ஆளுனர்கள் , முன்னாள் இயக்குனர்கள் , ஆளுனர்கள் … முறையே லயன் ஐ.டி.தனபாலன் , லயன்.கே.தனபால் , லயன் . பிரகாஷ்குமார் ,லயன் .ஜி.எம்.ராஜரத்தினம் , லயன் . ஆர்.பி.சத்யநாராயணா , லயன். ஆர்.பிரதிபாராஜ் , லயன். குமார் , லயன். என்.எஸ்.சங்கர் , லயன். ஜி.ராமசாமி , லயன். குலாம் உசேன் , லயன். கே.ஜெனநாதன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாவட்ட அளவில் பள்ளி , கல்லூரிகளில் நன்றாக படிக்கும் 50 மாணவ மாணவிகளுக்கு ., மொத்தத்தில் , மூன்று லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதோடு இவ்விழாவையொட்டி ., அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் “பசுமை தாயகம்” இயக்குனர் சவுமியா அன்புமணிக்கு, அவரது சேவையை பாராட்டி லயன்ஸ் கிளப் சார்பில் சிறந்த “வுமன் அச்சீவர் ” அவார்டும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

 

Share.

Comments are closed.