அதர்வா ஹன்ஸிகா நடிக்கும் 100

0

 235 total views,  1 views today

வெற்றிக் கொடி நாட்டிய பல ஹாலிவுட் மற்றும்பாலிவுட் படங்களை தென்னிந்தியாவில் விநியோகம் செய்த ஆரோ சினிமாஸ், தரமான படங்களை மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காக திரைப்படத் தயாரிப்பிலும் கால் பதித்திருக்கிறது.
100 என்று புதுமையாகப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டைட்டிலே எதிர்பார்ப்புகளைத் தூண்டுகிறது. அதர்வா ஹன்ஸிகா இணை நடிக்கும் இப்படத்தை சாம் ஆன்டன் இயக்குகிறார்.
சமீபத்தில் வெளியான பல படங்களில் கவனம் ஈர்த்த சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்றிருப்பவர் கிருஷ்ணன் வஸந்த்.  திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைக்க, படத்தொகுப்பு பணியை ரூபென் கவனிக்கிறரா்.

Share.

Comments are closed.