அதர்வா- R.கண்ணன் கூட்டணி – ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும்

0

Loading

வர்தகரீதியாக நிரூபணமான ஒரு இயக்குனர் மிகவும் நம்பிக்கைக்குரிய கதாநாயகனோடு இணைவது என்றுமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும். தமிழ் சினிமாவில் வர்தகரீதியாக  நிரூபணமாகியுள்ள இயக்குனர்களில் ஒருவர் திரு R.கண்ணன். அவரது முந்தைய படம் ‘இவன் தந்திரன்’ தடைகள் பல தாண்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில்  வேகமாக பதிந்து வரும் இளம் நாயகன் அதர்வாவோடு இணைந்துள்ளார். திரை உலகில்  அதர்வா- R.கண்ணன் கூட்டணி பெரும்  சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் R.கண்ணன் பேசுகையில், ” இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே  மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும். எல்லா தரப்பட்ட கதைகளிலும் ஜொலிப்பவர் என பெயரெடுத்துள்ள அதர்வா இப்படத்திற்கு பலமாக இருப்பார். கதாநாயகி மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளோம் ”.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் இசையமைப்பாளர் ரதன்  இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இயக்குனர் R.கண்ணனின் ‘Masala Pix’ நிறுவனமும் திரு.M K ராம்பிரசாத் அவர்களின் ‘MKRP’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளன. எதிர்பார்க்கப்படும் படமாக இது மாறியுள்ளது என்று  சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Share.

Comments are closed.