அப்பா, மகன் பற்றிய கதை “ராஜாவுக்கு ராஜா”

0

 142 total views,  1 views today

அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் P.T.சையது முகமது தயாரிக்கும்                                                                                                                       “ராஜாவுக்கு ராஜா”.

சந்தோஷமோ! வேதனையோ! கஷ்டமோ அனைத்தையும் ஜாலியாக கடந்துப்போகும் அப்பா, மகன் பற்றிய கதை தான் “ராஜாவுக்கு ராஜா”

சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். மகன போலீஸ்ல சேர்த்து விட்ட போலீஸ் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்க என யோசித்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி விருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார். பேலீஸான தைரியமில்லாத ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து…. ஆக்ஷன் மற்றும்  காதல் கலந்து  திரைக்கதை  அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர்  A.வசந்த்குமார். இவர் இயக்குனர் A.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

ஜாலியான அப்பாவாக மகாநதி சங்கர், அப்பாவின் இம்சைகளால் அவஸ்த்தைப்படும் மகனாக V.R.வினாயக், வல்லியாக அங்காடி தெரு சிந்து நடிக்க கதாநாயகிகளாக தியா, வைஷ்னவி, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம் A.வசந்த்குமார்.
ஔிப்பதிவு காசி விஷ்வா, இசை ஜெயக்குமார், பாடல்கள் காவியன், வசனம் – Deepak Kannadhasan, படத்தொகுப்பு கேசவன் சாரி, நடனம் ராதிகா, ஆக்ஷன் S.R.முருகன், கலை பத்து.

இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டுப்பாளையும், ஊட்டி, தேனி ஆகிய பகுதிகளில் நடத்தியுள்ளனர்.

Share.

Comments are closed.