அறப்பணியில் அறம் படக்குழு

0

 847 total views,  1 views today

தாங்கள் ஒதுக்கப்பட்டதுக்காகவும், புறக்கணிக்கப்பட்டதற்காகவும் நினைத்து தற்போது  கொந்தளித்தும் கொண்டிருக்கும்  தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக ‘அறம்’ உருவாகியுள்ளது. இந்த காரணத்திற்காகவே, நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அறம்’ படத்திற்கு மக்கள் இடையேயும் விநியோகஸ்தர்கள் இடையேயும்  பெரும் எதிர்பார்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. இப்படத்தில்  மாவட்ட ஆட்சியாளராக அசத்தி உள்ளதாக கூறப்படும் நயன்தாரா நடித்திருக்கும் இப்படம் சமுதாய பிரச்சனைகளை பற்றி வெறுமனே வாய் பேச்சில் அலசி கொண்டிருக்காமல் , சில பல செயல் திட்டங்களையும் அலசி உள்ளதாம். ஒரு படம் வெற்றி பெற பல்வேறு யுத்திகள் பிரயோகிக்க படும் இந்தக் கால கட்டத்தில் , பெரிய பின்பலம் இல்லாமல்  சமுதாயத்துக்கு உதவும் ஒரு அரிய கண்டு பிடிப்பை செய்யும் திறமை சாலிகளுக்கு அவர்களது ஆராய்ச்சி மேம்பட செய்யும் முயற்சிகளுக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் துணை நிற்கும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.
இதற்காக அணுக வேண்டிய தொடர்ப்பு: facebook : KJRStudios
Twitter: @KJR_Studios
Share.

Comments are closed.