811 total views, 1 views today
அறம் பார்க்க விரும்பு’ என்பதே தற்போதைய பேச்சு. ஊரெங்கும், உலகெங்கும் நேற்றைய தேதியில் வெளி ஆகி மிக பெரிய வெற்றி பெற்று இருக்கும் “அறம்” வினியோகஸ்தர்களுக்கும்,திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் மிக பெரிய லாபத்தை ஈட்டி தரும் என எதிர்பார்க்க படுகிறது. ‘கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய நிறுவனத்தின் மூலம் தயாரிக்க பட்டு , trident ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளி இட, கோபி நயினார் இயக்கத்தில் , நயன்தாரா மாவட்ட கலெக்டர் ஆக சிறப்பாக நடித்து இருக்கும் அறம் படத்தின் வெற்றி, நயன்தாராவின் கடின உழைப்பிற்கும், தெளிவான திட்டமிடுத்தலுக்கும் ஒரு சிறந்த பரிசாக கருத்தப்படுகிறது.
இதற்கிடையே நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு தொல் திருமா வளவன் ‘அறம்’ படத்தை பார்த்து படக் குழுவினரை அழைத்து பாராட்டினார். “அறம் மிக மிக முக்கியமான, ஆரோக்கியமான படம் ஆகும். மிக கூர்மையான வசனங்கள், தெளிவான காட்சிகள் என்று படம் மிக பிரமாதமாய் இருக்கிறது” என்று பாராட்டினார்.