கடந்த சில நாட்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள திரு. வேணுகோபால் அவர்களின் விளைநிலங்களுக்கு சென்றுள்ளார்.
தனது விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது முயற்சி பற்றி மிகவும் பெருமையாக கூறுகிறார். இவரின் முக்கிய குணநலன்களை பார்த்து வியந்து போன நடிகர் கார்த்தி தனது உறவுகளுடன் செங்கல்பட்டு சென்றுள்ளார்.
நடிகர் கார்த்தி தனது புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இயற்கை விவசாயத்தை பார்த்து பல புதுமையான விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சில அர்த்தங்களை தந்தது. நமது ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் காப்போம்.அங்கே கிடைத்த இயற்கையான காற்று , அங்கு சந்தித்த மனிதர்கள், கால்நடை, கோழி அனைத்து காட்சிகளும் கண்முன் வந்து செல்கின்றன. ஒவ்வொருவரும் கட்டாயம் இங்கு வந்து பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும்.
மெக்கானிக்கல் இஞ்சினீயரான திரு. வேணுகோபால் அவர்கள் இயற்கை விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் வேளாண்மை தொழிலை பேரார்வத்துடனும் நம்பிக்கையோடும் தனது விளைநிலங்களில் விவசாயம் செய்துவருகிறார்
இந்த விளைநிலத்தின் உரிமையாளரான வேணுகோபால், நடிகர் கார்த்தி பற்றி கூறினார். நான் ஆனந்தவள்ளி பள்ளியில் விவசாயம் சார்ந்த பணிகளை குழந்தைகளுக்கு கற்று தருகிறேன். அப்பள்ளியின் தாளாளர் , நடிகர் கார்த்தியின் குடும்பம் வந்து உங்களிடம் விவசாயம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் விரும்புகின்றனர் என்று கூறினார்.மறுநாளே கார்த்தி சார் குடும்பத்தாரிடம் தொடர்பு கொண்டு அவர்களை என் பண்ணைக்கு அழைத்தேன். கார்த்தி சாரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் மிகுந்த ஈடுபாடுடன் சின்ன சின்ன விஷயங்களை கூட பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்தது எனக்கு பேரின்பமாக இருந்தது .அவரின் வேலைப்பளுவிற்கு இடையில் இங்கு வந்தது பாரட்ட வேண்டியவையாகும்.
பல மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். இயற்கைக்கு மாறாக செயற்கை பொருட்களை பயன்படுத்தினால் ஆபத்து நமக்குதான் என்பதை உணர வேண்டும். எனவே செயற்கையானவற்றை தவிர்த்து இயற்கை தரும் பலன்களை பற்றி தெரிந்து கொண்டு அதன்படி வாழ முயற்சிசெய்வோம்.
மேலும், செலவில்லா விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளவர்கள் இந்த இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் www.ilearnfarming.com