ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக நட்டி!

0

 256 total views,  1 views today

ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார். சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார்.
வழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா. இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் அந்த சந்தேகத்தை விளக்குகிறார்கள். ஆ மற்றும் அம்புலி படங்களின் இயக்குனர் ஹரீஷ் கூறும்போது, “படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை  கொண்டது.
இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படத்தை பற்றிய எந்த தகவலையும் வெளியிடாத இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ், நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
Share.

Comments are closed.