179 total views, 1 views today
.
ஆஸ்கார் விருதுகளுக்கான மரியாதை இந்தியர்கள் இடையே சற்றே அதிகம் தான்.அதிலும் குறிப்பாக இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு ஆஸ்கருக்கு மவுசு அதிகம்.. லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா ஆகிய படங்கள் சிறந்த வெளி நாட்டு படங்கள் வரிசையில் விருது பெற்றது இந்திய தேசத்துக்கு பெருமை தான்.
பிரபல நடிகர் நிவின் பாலி நடிப்பில் , மிகுந்த பொருட்செலவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் திரு கோகுலம் கோபாலன் தயாரிப்பில்,பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரயூஸ் இயக்கத்தில் உருவான “காயன்குளம் கொச்சுன்னி” படம் மலையாள திரை உலகில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த படம். தற்போது இந்த படம் சர்வதேச ரசிகர்களையும் சென்று அடைய உள்ளது.91 ஆவது அகாடமி விருது ஆகிய இந்த வருடத்தில் வெகு சில தென்னிந்திய படங்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி இறுதி பட்டியல் வெளிவர உள்ளது. வெற்றி பெற்றவருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்க படும்.