நடிகர் கார்த்திக் நடித்த,மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான ” அமரன் ” படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63).
இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார், நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படும் .நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும் .
“அமரனை” தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.இவரது இயற்பெயர் டைடஸ் ( Titus ) , மனைவியின் பெயர் ஷோபியா ( Sofiya ) ,மற்றும் மகள்களான ஷரோன் ( Sharon ) , பிராத்தனா ( Prathana ) உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.