நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்’. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரியில் ரிலீசாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், ஜூன் 22ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ஸ்கிரின் சீன் என்ற பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். `டிக் டிக் டிக்’ இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.