ஹன்சிகாவின் 50.ஆவது படம்

0

 184 total views,  1 views today

திரையில் நாயகர்களே கோலோச்சி கொண்டு இருந்து,  நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை உறுதி படுத்துகிறது. 
இளம் இயக்குனர் U R ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதா பாத்திரத்தை படைத்து இருக்கிறார். இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த படத்தின் தலைப்பு  வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது, என்ற தகவலையும் தெரிவித்தார் ஜமீல். 
“இந்த கதையையும் , திரை கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த கதையின் நாயகி அழகும், அறிவும், தீரமும், இளமையும், நிறைய பெற்றவள்.ஹன்சிகா உரிமையுடன் இந்த கதா பாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் title மற்றும் முதல் பார்வை வெளி வருவது எனக்கு மிக பெரிய பெருமை. தனுஷ் சார்  தலைப்பை வெளியிட இருக்கிறார். Etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ளது” என்கிறார் U R ஜமீல் நம்பிக்கையுடன்.

 

Share.

Comments are closed.