இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பாண்டியன்

0

Loading

 

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் – என்ற சூப்பர்ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படம் டைட்டிலிலேயே அதிரடியை கிளப்பியிருக்கிறது

இப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறியது
இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் ஜி ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது
கதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா,  சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து ,பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்
ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் வட சென்னை மற்றும் சந்தனத்தேவன் படத்திலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல்
படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
தேனி, மதுரை,பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தமிழ் திரையுலகின் அமீர், ஒரு சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் நடிகர். அவரது நான்கு படைப்புகளில், மூன்று மிகச்சிறந்ததாக அங்கீகரிக்கபட்டு, மௌனம் பேசியதே, ராம், மற்றும் பருத்திவீரன், அவருக்கு நிறைய பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. கடந்த 2009ம் ஆண்டு அவர் நடிகராக களம் கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share.

Comments are closed.