226 total views, 1 views today
விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன்.
இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார்.
வரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும் இயக்க உள்ளார்
இதைத் தொடந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிக்க உள்ள படத்தை மிக மிக கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார் மகாராஜன்.
விஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன். சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன்.
பிரபல கதாநாயகி, பிரபல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.