இயக்குனர் மகேந்திரன் ரசிகன் நான் -இயக்குனர் ப்ரியதர்ஷன்

0

Loading

 
பொதுவாக ஒரு படம்  எந்த வகையை சேரும் ,அப்படத்தில்  என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க  அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘நிமிர்’ என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , ” எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய  ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் ‘நிமிர் ‘ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான்  பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு . இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார்  தான் ‘நிமிர்’ என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த மகன்-தந்தை உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். ‘நிமிர்’ மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது. ”
ஏகாம்பரம் ஒளிப்பதிவில், டர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில் , ஐயப்பன் நாயர் M S  படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனம்  மற்றும் மோகன் தாஸின் கலை இயக்கத்தில் ‘நிமிர்’ உருவாகியுள்ளது.
Share.

Comments are closed.