இயக்குனர் வெற்றி மாறன் வெளி இடும் “எட்டு தோட்டாக்கள்” டீசர்.

0

 1,235 total views,  1 views today

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் “எட்டு தோட்டாக்கள்” வளர்ந்து வரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஈன்று வரும் படம் ஆகும்.புது முகங்கள் வெற்றி மற்றும் அபர்ணா பால முரளி இணையாக நடிக்க இவர்களோடு நாசர், எம் எஸ் பாஸ்கர், அம்மா creations சிவா,mime  கோபி, மீரா மிதுன்  ஆகியோர்  நடிக்க ,புதிய இசை அமைப்பாளர் கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, புதிய பட நிறுவனமான வெற்றிவேல் சரவணா சினிமாஸ்  மற்றும் பிக் பிரிண்ட் pictures இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசரை
நாளை 27 பிப்ரவரி மாலை 6  மணிக்கு  இயக்குனர் வெற்றி மாறன் வெளி இட உள்ளார். “வெற்றி மாறன் சார் எனக்கு ஒரு ஆசான்.  நான் நாளைய  இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற போது அவரை சந்தித்து பேசியது என் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ளது. இப்பொழுது அவரே என் முதல் படத்தின் டீசரை வெளி இடுவது எனக்கு மிக மிக பெருமை. படப்பிடிப்பு முடிந்து , போஸ்ட் production பணிகளும் பெரும்பாலும் முடிவடைந்து உள்ளது. மார்ச் மாதம் வெளி வரும் “எட்டு தோட்டாக்கள்” குறி தப்பாமல் வெற்றி பெறும்” என்று  நம்பிக்கையுடன் கூறினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.
 
Share.

Comments are closed.