‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா

0

Loading

சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை ‘Axess Film Factory’ சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார்.

இது குறித்து திரு.டில்லி பாபு பேசுகையில் , ” இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த பேரார்வம் தான் திரையில் வெளிப்பட்டு மக்களை கவர்ந்துள்ளது . தமிழ் சினிமா ரசிகர்கள் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் ட்ரைலருக்கு கொடுத்துள்ள வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைகதையை இயக்குனர் மாறன் அருமையாக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். வரும் மாதங்களில் ரிலீசாக இப்படம் தயாராகவுள்ளது.”

இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். அஜ்மல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் CS இசையில் , சான் லோகேஷின் படத்தொகுப்பில், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உருவாகியுள்ளது.

Share.

Comments are closed.