இளைஞர்களுக்கு பிடித்த வகையில் ‘ஹர ஹர மஹாதேவகி’ -இயக்குனர் சந்தோஷ் P ஜெயகுமார்

0

Loading

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி  நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் P ஜெயகுமார் இயக்கியுள்ளார். 
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, “இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில் ‘ஹர ஹர மஹாதேவகி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.
கவுதம் கார்த்திக் ஒரு நடிகர் என்பதயும் தாண்டி நல்ல மனிதர்.  
இந்த சமயத்தில் நான் என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எந்நேரமும் படத்தை  பற்றியும், படத்திற்கான இடத்தேர்வு பற்றியும் தீவிரமாக சிந்தித்து கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆர்வம் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தன்னுடைய  அடுத்த படம் ஹாரர் கலந்த அடல்ட் கதையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
Share.

Comments are closed.