Wednesday, January 15

 உற்சாகத்தில்  நடிகர் விமல்

Loading

vimal-1

  உற்சாகமாக இருக்கிறார் நடிகர் விமல்..   வெற்றி பட இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் “ மன்னர் வகையறா “ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளதாக தெரிவித்த அவர்..உற்சாகத்துடன் கூறியது..

அடுத்து சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த படத்தில் இமான் இசை, விஜய் மில்டன் ஒளிப்பதிவு, பாண்டிராஜ் வசனம் என பிரபலங்கள் இணைகிறார்கள்.

ராஜதந்திரம் இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இத்துடன் இன்னும் நான்கு பிரபலங்களின் படங்களும் பேச்சு வார்த்தையில் இருக்கிறது.

2017 ம் ஆண்டு எனக்கு புதுத் தெம்பைத் தருவதாக இருக்கும் என்கிறார் நம்பிக்கையுடன் விமல்.. வாழ்த்துவோமே ! வளரட்டும்..