உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.