பிரதி வெள்ளிக்கிழமையன்றும் பல படங்கள் திரைக்கு வந்துக் கொண்டே தான் இருக்கிறது. வெகு சில படங்களே மக்களின் ஆதரவை பெற்று அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரீ ரிலீஸ் செய்யப்படும். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து பெஜாய் நம்பியார் இயக்கத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீசான படம் ‘சோலோ’. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த நாளிலிருந்தே திரையிட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த ஒரு நாளில் ‘சோலோ’ படத்தை பார்த்த சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் படத்தின் எல்லா அம்சங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவி இப்படத்தை காணும் ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று முதல் ‘சோலோ’ படம் தமிழ்நாடு முழுவதும் எண்பதிற்கும் மேற்பட்ட திரைகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை காண காத்திருக்கும் பெரும் கூட்டத்திற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது.