’என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ மூலம் ரீ எண்ட்ரியாகும் சித்ரா

0

 178 total views,  1 views today


எஸ்.எச்.மீடியா டிரீம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’.
அறிமுக இயக்குநர் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக
நடிக்க, மதுமிதா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி ராமர், அம்பானி சங்கர், ராகுல் தாத்தா,
டெல்லி கணேஷ், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், 22 ஆண்டுகளுக்கு
பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் சித்ரா, இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகிறார்.

குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதை கழிக்கும் இளைஞர்களும், வாய்ப்பு வந்தால்
வாழ்க்கையில் சாதிப்பார்கள், என்ற கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், கலர்புல்லான
காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் சித்ராவும், டெல்லி கணேஷும் ஹீரோவின் பெற்றோர்களாக நடித்திருந்தாலும், அவர்களது
பிளாஷ் பேக் காதல் காட்சிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்கும் விதத்தில் வந்திருக்கிறது. மேலும்,
இவர்களுடன், ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அன்லிமிடேட்
காமெடியை கொடுத்திருக்கிறார்கள்.

இசை – லோகேஷ், ஸ்டண்ட் – ராக்கி ராஜேஷ், பாடல்கள் – கவி கார்கோ, எடிட்டிங் – சாஜித், நடனம் – பவர்
சிவா, மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்.

முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்
நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE