1,102 total views, 1 views today
நான்’, ‘சலீம்’, ‘இந்தியா – பாகிஸ்தான்’, தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமோக வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. நடிகர் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.
விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
“சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’. எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்” என்று தனக்குரிய அந்த தனித்துவமான புன்னகையோடு கூறி விடை பெறுகிறார் நடிகர் தியாகராஜன்.