வரும் மார்ச் 5 ஆம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் நடைபெறும் விழாவில் மொரிசியஸ் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார்.
எம்.ஜி.ஆர் நினைவுப் புகைப்படக் கண்காட்சியை இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ்.ராதா கிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.
பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் வெண்கலைச் சிலையை பத்ம விபூசண் ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார்.
எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் கலை, அரசு, அரசியல் ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவிருக்கின்றன.