935 total views, 1 views today
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் “ அடிமைப்பெண் “ வசூல் சாதனை பெற்ற அடிமைப் பெண் 25 வாரம் அமோகமாக ஓடியது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.
ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்றிருந்தார். மற்றும் ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.
கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்
வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
சொர்ணம் வசனம் எழுதி இருந்தார்.
கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது.
1969 ம் ஆண்டு வெளியாகி அடிமைப்பெண் படத்தில் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் “ ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகமானது. அதே மாதிரி ஜெயலலிதா முதன் முதலாக பாடிய “ அம்மா என்றால் அன்பு “ பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜெய்ப்பூர் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெற்ற படமும் இதுதான்.
48 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை தி ரிஷி” ஸ் மூவீஸ் பட நிறுவனத்தை சேர்ந்த சாய் நாகராஜன்.கே. அடிமைப் பெண் படத்தை டிஜிட்டலில் அதி நவீனப் படுத்தி வெளியிடுகிறார்.
இன்றைய நவீன டெக்னிக்கல் அம்சங்களை சேர்த்து புதுப் பொலிவுடன் அடிமைப்பெண் உருவாகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த கால கட்டத்தில் “ அடிமைப்பெண் “ படத்தை நவீனப் படுத்தி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் சாய்நாகராஜன்.கே.