எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் தமிழக அரசிற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி

0

 304 total views,  1 views today

பொன்மனச் செம்மலென்றும்

மக்கள் திலகமென்றும், புரட்சி தலைவர் என்றும்

வள்ளல் என்றும்

வல்லவன் என்றும்

தமிழக மக்களின் மனதிலும், வரலாற்றிலும் ஆழமாய் பதிந்த பெயர்

எம்.ஜி.ஆர்.

வருடங்கள் ஆயிரம் கடந்தாலும் அன்றலர்ந்த மலர் போல

அவர்தம் புகழ் ஜொலிக்கும்!

திரைப்படமாகட்டும், அரசியலாகட்டும், தொட்டதுறையெல்லாம் பொன்னாக்கிய மக்கள் மன்னன்.

எட்டாத இலக்கென்றாலும், எல்லா நடிகர்களுக்கும் கனவு நாயகன். தான் நலம் பெற்றது போல், தம் கலை சார்ந்த மற்றவர் வாழ்வும் உயரவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி பலம் பெற செய்தவர். அண்ணலவர் செய்த காரியம் இன்று பல்லாயிரம் கலைக் குடும்பந்தனில் ஒளி விளக்காய் மின்னுகிறது. அவர்தம் பூதவுடல் இயற்கையோடு கலந்து, கரைந்தாலும் அவர் செயல்களும் தர்மங்களும் காலம் கடந்து நிற்கும்.

அன்னாரது நூற்றாண்டு விழாவினை தமிழகமெங்கும் கொண்டாடும்

தமிழக அரசிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின்

சிரந்தாழ்ந்த நன்றிகள் கோடி.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தலைவர்

M.நாசர்

Share.

Comments are closed.