Wednesday, March 26

ஒரு போலீஸ்காரரின் மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல்

Loading

5B6A9547
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தி வரும் இந்த படத்திற்கு, நிச்சயமாக விஷால் சந்திரசேகரின் இசை பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். ‘ரெதான் – தி  சினிமா  பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும் இந்த  ‘குற்றம் 23’ திரைப்படத்தை, ‘அக்ராஸ் பிலிம்ஸ்’  தமிழகமெங்கும் 300 திரையரங்குகளில்  வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
 “சிறு சிறு விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு காட்சியை மென்மேலும் அழகுப்படுத்தும் யுக்தியை நன்கு அறிந்தவர் இயக்குநர் அறிவழகன் சார். தனக்கு வேண்டியதை மிக தெளிவாக தன்னுடைய தொழில் நுட்ப கலைஞர்களிடம் இருந்து பெற்று கொள்ளும் அறிவழகன் சாரோடு இணைந்து பணியாற்றி இருப்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது. ‘குற்றம் 23’ படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள், அதில் ‘பொறி வைத்து’ பாடலுக்கு மட்டும் ஒரு தனித்துவமான சிறப்பு இருக்கின்றது.  ஒரு போலீஸ்காரரின் மற்றொரு மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் பாடல் தான் இந்த  ‘பொறி வைத்து. அவர் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் சிறைச்சாலை, துப்பாக்கி போன்ற சொற்களுக்கு, தூய தமிழாக்கம் கொடுத்து இந்த பாடலை  எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் விவேகா. குற்றம் 23 படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக இந்த படத்தின் பிண்ணனி இசை,  படம் பார்க்கும் ரசிகர் ஒவ்வொருவரையும், படத்தின் கதையோடு இணைந்து பயணிக்கச் செய்யும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.⁠⁠⁠⁠