ஓடு ராஜா ஓடு’ இசை வெளியீட்டு விழா

0

 148 total views,  1 views today

 

கணவன் – மனைவி சந்தோஷமான வாழ்க்கையில், ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது என்ற கருவை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘ஓடு ராஜா ஓடு.’

powered by Rubicon Project விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தில் குரு சோமசுந்தரத்துடன் நாசர், ‘லென்ஸ்’ அனந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

நான்கு முக்கிய கேரக்டர்கள் 24 மணி நேரத்தில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையான திரைக்கதை ஆக்கிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நாசர் “சமீபமா சினிமாவுக்கு வர்ற இயக்குநர்கள்லாம் நல்லா படிச்சவங்களா இருக்காங்க. அதனால நிறைய வித்தியாசமான படங்கள் வருது. அந்த மாதிரி ஒரு படம்தான் ஓடு ராஜா ஓடு.


எத்தனையோ படங்கள் நடிச்சாலும் ஒருசில படங்கள் மட்டும்தான் அதிக ஈடுபாட்டோட நடிக்கிற மாதிரி அமையும். அந்தவகையில் இந்த படத்தில் நான் அதிக ஈடுபாட்டோடு நடிச்சேன். படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவா ஓடினேன். இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்” என்றார்

Share.

Comments are closed.