கடலூர் நகர அரங்கத்தில் ஓவியா படம் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஓவியா படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் காண்டீபன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் லட்சுமி பழனிவேல் , ராம்குமார், காமெடி நடிகர் சேசு ,மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீநாத்மற்றும் ஓவியா படத்தொகுப்பாளர் சூரியநாராயணன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மகளிரணி மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி ,புதுவை மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ .கே. டி .ஆறுமுகம் ஆகியோர் ஓவியா படத்தின் டீஸரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்றிருமான ஏ .எஸ் சந்திரசேகரன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட மகளிரணி தலைவி கலைச்செல்வி மாநில காங்கிரஸ் பேச்சாளர் சக்திவேல் மற்றும் ஓவியா குழுவினர் மற்றும் இளைஞர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு பட டீஸர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் கண்டு களித்தனர். விழாவானது டி.எஸ்.மீடியா குழுவால் காவல் துறை ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.