213 total views, 1 views today
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் பேரிடரில் இருக்கும் டெல்டா மக்களுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கில்டு நிவாரணப் பொருட்களை வழங்குகிறது. இதற்கு தலைவர் ஜாக்குவர் தங்கம் தலைமையில் உறுப்பினர்கள் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று மக்களை நேரிடையாக சந்தித்து நிவாரணம் உதவிப் பொருட்களை வழங்குகிறார்கள். இன்று அதற்காக ஒரு லாரி முழுவதும் நிவாரண பொருட்களுடன் குழு கிளம்பி சென்றது. இதனை கலைப்புலி தாணு வழி அனுப்பி வைத்தார். இதன் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன் பெறுவர்கள்.