சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் “கடைக்குட்டி சிங்கம் ” படத்தின் முதல் பார்வை நேற்று வெளிவந்துள்ளது.
தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு “கடைக்குட்டி சிங்கம்” படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று வெயிடப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை சூர்யா நேற்று மாலை Twitter-ல் வெளியிட்டார். போஸ்டரில் “பயிர் செய்ய விரும்பு ” “விவசாயி ” போன்ற வாசகங்களை காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிபதிவு வேல்ராஜ். 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.