கடைசி எச்சரிக்கை… யாருக்கு? எதற்கு?
கடைசி எச்சரிக்கை…
தமிழ் திரையுலகில் பிரபலமான இமான் அண்ணாச்சி, ஈரோடு மகேஷ், ப்ளாக் பாண்டி, அந்தோணி தாசன், வி.வி.பிரசன்னா, ஆதவன், லோகேஷ், கோபி, தாபா, உத்ரா, சரவணன், ஆர்த்தி, நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோர்கள் சீரியஸாக எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
அதுவும் இதுதான் கடைசி எச்சரிக்கை என்று!
இந்த எச்சரிக்கை யாருக்காக, எதற்காக..? என்று தெரியவில்லை. இது பற்றி தெரிந்து கொள்ள அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.
அவர்களுடைய கைபேசிகளும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.