கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !

0

 234 total views,  1 views today

கபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார்.
ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சி கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார் .அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. இது வரை, ரூ 61 லட்சம்  அவருக்கு நேரடியாகவும், சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு நான்  உதவியிருக்கின்றேன் என கலைப்புலி எஸ் தாணு  அவர்கள் கூறியுள்ளார்.
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரே நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெறும் வெற்றி பெற்றுள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறுகளுக்கு பதிலளித்தார் கலைப்புலி எஸ் தாணு.
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை  கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதை பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான்  தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..
தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்
என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறினார்.
Share.

Comments are closed.