கமல் வைத்திருக்கும் பன்ச்

0

 337 total views,  1 views today

நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா அலோபதி என்ற தனி சார்பு எனக்கில்லை.

அதுவரை டெங்குவை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்றால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப்பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். இத்தனை நாள் ஈ ஓட்டாமல் கொசுவை விரட்டியிருக்கலாம்.
Kamal Haasan

Share.

Comments are closed.