Friday, December 13

“கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.

Loading

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.
இப்படம் Facebook பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas..

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக                                                   

கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தை தயாரிக்கிறது..

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

 

ஒளிப்பதிவு                     –        மனோகர்

இசை                              –          கணேஷ் ராகவேந்திரா

பாடல்கள்                       –        சொற்கோ

கலை                              –        மனோ

நடனம்                           –        எஸ்.எல்.பாலாஜி

ஸ்டண்ட்               –        ஆக்‌ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை  –         D.B.வெங்கடேசன்

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.   இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இணை தயாரிப்பு –   JSK கோபி

தயாரித்து இயக்குபவர் ராகுல்.