கலப்பை மக்கள் இயக்கம் நாகர்கோவிலில் நடத்திய விழா

0

 191 total views,  1 views today

நாகர்கோவில்-குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் விதமாக அதற்காக போராடிய தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல் அவர்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் கவுரவப்படுத்தும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் விதவை தாய்மார்களுக்கு இலவச ஆடுகளை திரைப்பட இயக்குனர் பி.டி செல்வகுமார் வழங்கினார் இதனையடுத்து பேசிய திரைப்பட இயக்குனர் பி.டி செல்வகுமார்,நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது,தனக்குள்ளேயே குற்றங்களை வைத்துக்கொள்ளும் பெண்களே தான் இது போன்று மீ டூ புகார்களை கூறிவருகின்றனர்.இது போன்ற புகார்களால் பெண்கள் கீழ் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்,இதுபோன்ற மீ டூ புகார்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆண்கள் ஒட்டுமொத்த ஆண் இனத்துக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த விழாவில் 108 விதவை தாய்மார்களுக்கு இலவ ஆடுகளை திரைப்பட இயக்குனர் பி.டி செல்வகுமார் வழங்கினார்.

Share.

Comments are closed.