காமெடி கலந்த திகில் படம் –  “பேய் இருக்கா இல்லையா   “

0

 301 total views,  1 views today

டீம் வொர்க் டாக்கீஸ் என்ற பட நிறுவனம் பா.ரஞ்சித்குமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ பேய் இருக்கா இல்லையா “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் அமர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடிக்கிறார். மற்றும் விஜயகுமார் , லிவிங்ஸ்டன், தாடிபாலாஜி, மதன்பாப், பொன்னம்பலம், அனுமோகன், மதுமிதா, ரேகாசுரேஷ்,  சுரேஷ், சதா, பிந்துரோஷினி, கீர்த்தி கௌடா, பட்ஜெட் லோகநாதன், சுவாமிநாதன், கூழ்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –      டி.மகிபாலன்  /  இசை  மற்றும் பாடல்கள்  –  ஆர்.சம்பத்                                 

கலை           –        ராஜு / நடனம்   –  ராபர்ட், சுரேஷ், ஆன்டோ                                            

ஸ்டன்ட்       –                  அமிதாப் /  எடிட்டிங்    – ஆர்.ஜி.ஆனந்த்                                               

நிர்வாக தயாரிப்பு  –       ராஜேந்திரன்                                                                                               

இணை தயாரிப்பு  – எஸ்.சுப்பிரமணியம்வாத்தியார்,  ஆர்.எங்கல்ஸ், ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.ஜெகதாளன்.                                                                                  

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் , தயாரிப்பு  –  பா.ரஞ்சித்குமார்

படம் பற்றி இயக்குனர் பா.ரஞ்சித்குமாருடன் பேசிய போது….

கடவுளை நேர்ல பார்த்தேன்னு சொன்ன நம்ப மறுக்கு  நாம், பேயை பார்த்தேன்னு சொன்ன அப்படியான்னு உடனே நம்பிவிடுகிறோம்.

அப்படின்னா பேய் என்பது என்ன  ? அது அமானுஷ்ய சக்தியா, வாழ்ந்தது இறந்தவர்களின் ஆத்மாவா அல்லது மனிதர்களின் மூட நம்பிக்கையா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சும்மா ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று மிகப் பெரிய தாதா ஒருவரின் தம்பியை அடித்து விடுகிறார்கள். கோபம் கொண்ட தாதா அந்த நால்வரையும் கொல்வதற்காக தேடிக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த அவர்கள் ஓடி ஒளியும் இடம் ஒரு பூத் பங்களா.அங்கு போன பிறகு தான் தெரிகிறது அது அமானுஷ்யமான பங்களா என்பது. உள்ளே பேய்களின் நடமாட்டம் வெளியே ரவுடிகளின் நடமாட்டம் உள்ளே இருந்தால் பேய் கொன்று விடும்.

வெளியே வந்தால் ரவுடிகள் கொன்று விடுவார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை காமெடி,  திகில் கலந்து படமாக்கி இருக்கிறோம். இதற்கு முன்பு நான் இயக்கி நாயகனாக நடித்த மண்டோதரி படம் எனக்கு இயக்குனராகவும், நடிகராகவும் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்ததுஆனால் இந்தப் படத்தில் நான் நடிக்க வில்லை.

படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அலங்கா நல்லூர், காரைக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது என்றார் இயக்குனர் பா.ரஞ்சித்குமார்.

படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Share.

Comments are closed.