கார்த்தி நடிக்கும் படம் இமயமலை – யுரோப் நாடுகளில் தயாராகிறது

0

 204 total views,  1 views today


மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து   கார்த்தி , ரகுல்  பிரீத்சிங் வெற்றி  ஜோடி மீண்டும்   இப்படத்தில் இணைகிறார்கள் .

மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்  .   இவர்களுடன் முக்கிய வேடத்தில்  நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.

இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர் ,”எங்கேயும் எப்போதும்” இயக்குநர் சரவணன் ,  ,பிரபல  இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப் ,
இயக்குநர்  R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : R  வேல்ராஜ்
எடிட்டிங் : ரூபன்
கலை : ஜெயஸ்ரீநாராயணன்
ஸ்டன்ட் : அன்பறிவ்
பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக்
நிர்வாக தயாரிப்பு : K.V.துரை
அஸோஸியேட்  தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன்.

பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை   ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட்   வழங்க – பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த  சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா  நடிப்பில் R. மாதேஷ் இயக்கத்தில் “மோகினி“ படத்தை தயாரித்து வருகிறார்.

“#கார்த்தி 17’’ படத்தின் படபிடிப்பு இம்மாதம் 8ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து யுரோப் நாட்டில் 15 நாட்களும் , ஹைதராபாத் , மும்பை , இமயமலை பகுதிகளிலும்  உருவாகிறது.

 

Share.

Comments are closed.