Monday, March 24

கார்த்தி-17 திரைப்படத்தின் படபிடிப்பு இனிதே துவங்கியது

Loading

கார்த்தி ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி17 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment  ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.

ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார் , இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ் ராஜ் , RJ விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் , ஒளிப்பதிவு வேல்ராஜ் , படத்தொகுப்பு ரூபன்.