‘காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

0

 172 total views,  4 views today

விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காளி’ படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த  இந்த ஆக்ஷன் டிராமா  படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் ‘காளி’ படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. ‘காளி’ படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

‘காளி’ படத்தை ‘Vijay Antony Film Corporation’ நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகள். யோகி பாபு, R K சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதனின் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பில் , சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கத்தில் , சக்தி சரவணனின் சண்டை இயக்கத்தில் ‘காளி’ உருவாகியுள்ளது.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE