காளி – விமர்சனம்

0

 418 total views,  1 views today

 அமெரிக்காவில் வாழும் டாக்டர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில் தன்னை வளர்த்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்றும், அவர்கள் தன்னை தத்தெடுத்தவர்கள் என்றும், தான் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்தவர் என்பதும் விஜய் ஆண்டனிக்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. இதனால் தன்னுடைய பெற்றோர்களை தேடி இந்தியா வரும் விஜய் ஆண்டனிக்கு தனது தாயார் பார்வதி இறந்துவிட்டதாகவும், அவரை கர்ப்பமாக்கி ஒருவர் ஏமாற்றிவிட்டதையும் தெரிந்து கொள்கிறார்.

தன்னுடைய தந்தை கனவுக்கரை என்ற கிராமத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த விஜய் ஆண்டனி அந்த ஊரில் ஒரு மருத்துவமனையை போட்டு அந்த ஊரின் மக்களுக்கு தெரியாமலேயே கேம்ப் என்ற பெயரில் அனைவரின் ரத்த மாதிரியை எடுத்து அதன்மூலம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து தனது தந்தை யார்? என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு வெற்றியும் கிடைக்கின்றது. தனது தந்தை யார் என்பதையும் கண்டுபிடிக்கின்றார். ஆனால் அவரிடம் தான் அவருடைய மகன் தான் என்று சொல்லாமல் மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார். விஜய் ஆண்டனியின் தந்தை யார்? ஏன் தனது தந்தையிடம் தன்னை மகன் என்று காட்டி கொள்ளவில்லை என்பதே மீதிக்கதை
 

பிச்சைக்காரன் படத்தில் வெளிப்படுத்திய அதே அம்மா செண்டிமெண்ட் நடிப்பை ஆரம்பத்தில் கொடுத்தாலும் அதற்கு பின்னர் திருடன், பாதிரியார், கல்லூரி மாணவர், ஆகிய கெட்டப்புகளில் வித்தியாசமான நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார். இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என இந்த படத்தில் நான்கு ஹீரோயின்கள். அஞ்சலி துடுக்குத்தனமாகவும், சுனைனா அழுத்தமான நடிப்பாலும் கவர்கின்றனர். நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதனராவ் ஆகிய மூவரில் ஒருவர் தான் விஜய் ஆண்டனியின் தந்தை என்று கதை கொண்டு போகப்படுவதால் மூவரும் தங்கள் நடிப்பை முடிந்தளவுக்கு சிறப்பாக கொடுத்துள்ளனர். வேலராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் வழக்கமான கிராமத்து வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
 
யோகிபாபு இந்த படத்தில் தனி ஆர்வத்தனம் செய்துள்ளார். இவருடைய காமெடி காட்சிகளுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை அருமை. ரிச்சர்ட் கேமிரா, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் கச்சிதம்
‘வணக்கம் சென்னை’ என்ற கலகலப்பான கதையை வெற்றி படமாக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, இந்த படத்தில் ஒரு குழப்பமான திரைக்கதையுடன் ஏகப்பட்ட பிளாஷ்பேக்களுடன் கொடுத்துள்ளார். ஆனால் பிளாஷ்பேக் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைத்துள்ளது. விஜய் ஆண்டனியின் அப்பா யார் என்பதை சஸ்பென்ஸ் ஆக கடைசி வரை வைத்திருந்தது  படத்தின் விறு விறுப்புக்கு துணை நிற்கிறது.
Share.

Comments are closed.