கிட்ட வா… கிட்ட வா… ஜி.எஸ்.டி. வண்டி வருது

0

 230 total views,  1 views today

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுஷனையே கடிக்க வந்துடுச்சு ஜி.எஸ்.டி. என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
உணவு விடுதியில் 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் நான்கு ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. போட்டு ‘தாளித்து’ விடுகிறார்கள் என்று ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டால்கூட இரண்டு ரூபாய் சேர்த்து ஜி.எஸ்.டி. போட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.
வாழும் காலமும் வசிக்கும் சூழலும் இப்படி இருக்கையில் பொன் முட்டையிடும் சினிமா என்ற வாத்தையையும் அறுக்க வந்திருக்கும் ஜி.எஸ்.டி வரியை கோலி சோடா 2 படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் எதிர்கொள்ளும் விதம் பாரட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை.
ரஃப் நோட் நிறுவனம் சார்பில் கோலி சோடா 2 படத்தைத் தயாரித்திருக்கும் வி.பாரச் சீனி வெளியிட்டிருக்கும் ஒர் அறிக்கையில் படத்தை கோடிகளில் தயாரித்து, அதற்கு விளம்பரம் செய்ய லட்சங்களிலாவது செலவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இந்தத் தொகையின் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்காக செலவிட்டு அதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இத்திட்டம் குறித்து இயக்குநர் விஜய் மில்டனும் சுருக்கமான வீிடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
நோக்கம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் வாழ்த்தி வரவேறுபதுதானே நமது கடமை.

Share.

Comments are closed.