“ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ வெளியிடும் ” கோலிசோடா 2 “

0

Loading

தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி…இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்சார்பில்  தயாரித்து வரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுபடத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  கோலிசோடா 2′ படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து வருகிறது  ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்நிறுவனம்.
விஜய் மில்டனின்   படங்கள் யாவும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும். அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த கோலிசோடா 2 படத்தின் டிரைலர், தற்போது அனைவராலும்  பாராட்டப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவுதம் வாசுதேவ் மேனன்  குரலும், அவருடைய எதிர்பாராத பங்களிப்பும்  டிரைலருக்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது. விஜய் மில்டன்  மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில், நான் இந்த கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன் என்றார் வி.சத்யமூர்த்தி.

 
Share.

Comments are closed.