கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்

0

 435 total views,  1 views today

அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே  பல சந்திப்புகள் நடைபெற்றது.
அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக  பல முறை அரசிடம் மனு  கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும்  என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில்  கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல.திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா ?? அதற்கான  உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்த வரியை ஏற்றுக்கொள்கிறோம். வங்கிகள் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை .ஏற்கனவே, அதிக வட்டி விகிதத்துக்கு பணத்தை வாங்கி படங்கள் தயாரிக்கப்படுவாதால் தயாரிப்பாளர்கள்  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசு அமைச்சக அதிகாரிகள், அமைச்சர்கள் , முதல்வர் உட்பட அனைவரிடமும்  கோரிக்கை வைக்க உள்ளோம்.நாளை மணிமண்டப  திறப்பு விழா ரஜினி, கமல் ஹாசன் பங்கேற்க உள்ளனர்.முதல்வர் பங்கேற்று இருந்தால்  இந்த மணிமண்டப திறப்பு  விழா சிறப்பாக இருந்திருக்கும்.அடுத்த வருடம் டிசம்பர் மாதம்  நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பனி  முடிவுக்கு வரும் அதில் MGR மற்றும் சிவாஜி கணேசன் சிலைகள் வைக்கப்படும். அதில் MGR மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெறும் என்றார்.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE