கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் கே பாக்கியராஜ்

0

Loading

dcim-94
திரைக்கதை என்றால் பாக்கியராஜ்….பாக்கியராஜ் என்றால்  திரைக்கதை…. இது தான்  தமிழ் திரையுலகினர்  மத்தியில் இருக்கும் கருத்து….தமிழ் மட்டுமின்றி  ஹிந்தி திரையுலகினை சார்ந்த அமிதாப் பச்சனும், அணில் கபூரும் இதையே தான் சொல்லகிறார்கள்…..அந்த அளவிற்கு ‘திரை பாக்கியம்’   பாக்கியராஜின் புகழ் பரவி இருக்கிறது…. அத்தகைய உன்னதமான படைப்பாளிக்கு இருந்த, இருக்கின்ற உதவியாளர்களை அவ்வளவு எளிதில் விரல் விட்டு  எண்ணி விட முடியாது….அவர்களுள் ஒருவர் தான் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய குருநாதர் கே பாக்கியராஜை கௌரவிக்கும் வண்ணமாக,  ‘சாதனை சல்யூட்’  விழாவை கடந்த 04.12.16 அன்று  சென்னையில் உள்ள ‘இமேஜ் உள் அரங்கத்தில்’ நடத்தினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் .
பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற ‘சாதனை சல்யூட் விழாவில் இயக்குநர் பாரதி ராஜா, கே பாக்கிய ராஜ் – பூர்ணிமா பாக்கியராஜ், எஸ் ஏ சந்திரசேகர், இயக்குநர் ஷங்கர், பிரபு, நாசர், சிவகுமார், எஸ் பி பாலசுப்பிரமணியம், விஷால், கார்த்தி, சாந்தனு, கீர்த்தனா, மன்சூர் அலி கான், இயக்குநர் விஜய், கரு பழனியப்பன், டிரம்ஸ் சிவமணி, டி சிவா, சுகன்யா, டாக்டர் கே கணேஷ், நெப்போலியன், கே எஸ் ரவிக்குமார், விக்ரமன், பி வாசு, லிங்குசாமி, கங்கை அமரன், பாண்டியராஜன், பவர் ஸ்டார் – ஸ்ரீனிவாசன், மயில்சாமி, ஜாகுவார் தங்கம், இசையமைப்பாளர் சி சத்யா, ஆர் கே சுரேஷ், இயக்குநர்  மகிழ் திருமேனி, பாலாஜி, இயக்குநர் சரண், வி சேகர், அருள்பதி, ரோகினி, சுஹாசினி, பிரவீன் காந்த், சேரன், எஸ் எம் குமார், ஆதவ் கண்ணதாசன், மங்கை ஹரி ராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், சித்ரா லக்ஷ்மன், எச் முரளி, கலை ஞானம், ஆடை வடிவமைப்பாளர் தக்ஷா, ஆர் கே செல்வமணி, சந்தான பாரதி, லொள்ளு சபா ஜீவா, எஸ் ராமகிருஷ்ணன், மனோபாலா, ஞான ராஜசேகர் (IAS), பாரதிராஜா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராம்பாலா, பாஸ்கி, நடன இயக்குநர்கள் ஷெரிப், சாண்டி,  ரமேஷ் கண்ணா, சந்தோஷ் பிரதாப் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்), லலிதா, ஸ்ரீதர், ஜி எம் குமார், ரேகா, லிஸ்ஸி, நந்தா பெரியசாமி, பிருந்தா சாரதி, பைவ் ஸ்டார் கதிரேசன், படத்தொகுப்பாளர் மோகன், மோகன் ராஜா, கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமரசாமி, சக்தி சரவணன், சுந்தர் சி,  ரம்யா (VJ) என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில், சாந்தனு – பார்வதி நாயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
“என் வாழ் நாள் முழுவதும்  என்னுடைய குரு கே பாக்கியராஜ் அவர்களுக்கு நான் கடமை பட்டிருக்கிறேன்….அவருடைய மகன் சாந்தனுவிற்கு, தமிழ் திரையுலகில்  வெற்றிகரமான கதாநாயகனாக  வலம் வர கூடிய எல்லா சிறப்பம்சங்களும் இருக்கின்றது…. கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் அதை உறுதி  செய்யும்.  என்னுடைய குருநாதரின் இயக்கத்தில் நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு…..அது இப்போது நிறைவேறி இருக்கிறது…..நான் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர்  பாக்கியராஜ் சார்…..கதாநாயகன் அவருடைய மகன் சாந்தனு…..” என்று கூறினார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
“என்னிடம் பணி புரிந்த, பணி புரிந்து கொண்டிருக்கின்ற உதவியாளர்கள் இந்த விழாவில் இருக்கின்றார்கள்…..அதற்கும்  மேலாக, என்னுடைய குருநாதர், எங்க இயக்குநர் திரு பாரதி ராஜா சார் இங்கு என்னோடு இருக்கிறார்கள்…..இதைவிட என்  வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நாள் இருக்க முடியாது….” என்று மகிழ்ச்சி கலந்த புன்னகையோடு கூறினார் கே பாக்கியராஜ்.⁠⁠⁠⁠
Share.

Comments are closed.