‘கோலி சோடா 2’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

0

 326 total views,  2 views today

ஒரு படம் எந்த வகையை  சேர்ந்தது , அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி முதன் முதலில் வெளிபடுத்துவதனாலயே ‘பர்ஸ்ட் லுக்’ என்ற ஒன்று இன்றைய சினிமாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயக்குனர் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்று அப்படத்தின் Post Production பணிகள் தொடங்கின. தற்பொழுது இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்’ புத்தாண்டன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போஸ்ட்டரை நடிகர் கார்த்தி தனது சமூக ஊடக அக்கவுண்டில் வெளியிட்டு ரிலீஸ் செய்யவுள்ளார். கூடிய விரைவில் , இரண்டாவது முறையாக ‘கோலி சோடா’ என்ற பிராண்ட் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது . இந்த ‘கோலி சோடா 2’ படத்தை ‘Rough Note’ நிறுவனம் தயாரித்துள்ளது.

Share.

Comments are closed.